தமிழகத்திலேயே மிகவும் நீளமான பறக்கும் மேம்பாலமான மதுரை - நத்தம் மேம்பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டது.கடந்த ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தினைவீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நிலையில் மதுரை மாநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது அதில், மதுரை நத்தம் சாலையில் புதிய பறக்கும் மேம்பாலம் கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி, மேம்பாலத்தில் போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உத்தரவின்படி மேற்படி நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் 24 மணி நேரமும் உதவி ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவலர்களுடன் கூடிய ரோந்து வாகனம் ரோந்து சென்றுவருகின்றது.
அதன்படி பாலத்தின் மேலே வாகனத்தை நிறுத்துவது, பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, பாலத்தில் வாகனங்களில் சாகசம் செய்வது, பாலத்தின் மேலே கேக் வெட்டுவது மற்றும் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் அமர்வது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Traffic