மதுரை ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 90க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு ரூபாய் 347.47 கோடி மதிப்பீட்டில் மதுரை ரயில் நிலையத்தை மறு சீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
என்னென்ன வசதிகள்?
கிழக்கு நுழைவாயிலில் இரண்டடுக்கு வாகன காப்பகம், மேற்கு நுழைவாயிலில் ஓரடுக்கு வாகன காப்பகம், ரயில் நிலையத்தையும் பெரியார் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை, பார்சல்களை கையாள தனி மேம்பாலம், கிழக்கு பகுதியில் உள்ள வாகன காப்பகத்திற்கு 2 மேம்பாலங்கள் அமைத்தல், உலக தரம் வாய்ந்த கழிப்பறை, பொருள் வைப்பறை, கிழக்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடத்தை 22.576 சதுர மீட்டரில் அமைப்பது, தரைதளத்தில் வருகை புறப்பாடு பணிகள் தனித்தனியாக செல்லும் வகையில் அமைத்தல், தாய்ப்பால் ஊட்டும் அறைகள், உதவி மையங்கள் மற்றும் முதல் தளத்தில் பயணிகள் பயன்பாட்டு வணிக நிறுவனங்கள் ,பொழுதுபோக்கு அம்சங்கள் அமைத்தல், பயணிகள் காத்திருப்பு அறை, உணவகங்கள், சிறு வணிக கடைகள், கழிப்பறைகளும், 2வது தளத்தில் வணிக வளாக பயன்பாட்டிற்காகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் பாதை மேல் காத்திருப்பு அரங்கம் :
மேலும் முக்கிய அம்சமாக கிழக்கு மேற்கு நுழைவாயில்களில் ரயில் நிலைய கட்டிடங்களை இணைத்து ரயில் பாதைகளுக்கு மேலே பயணிகள் காத்திருப்பு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில் இருந்து மக்கள் தங்களுக்குரிய நடை மேடைகளுக்கு எளிதில் சென்று வர 2 ஜோடி நகரும் படிக்கட்டுகளும், 2 மின் தூக்கிகளும், 4 நடை மேம்பாலம் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளது.
தற்போதைய மேற்கு நுழைவாயில் ரயில் நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த பயணிகள் வசதிகளுடன் இருமாடி கட்டிடமாக அமையும் என்று திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்த புள்ளியை சென்னையை சேர்ந்த ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனம் ஏற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
36 மாதத்தில் பணிகள் நிறைவு :
இந்நிலையில், 36 மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் பணிகளை தொடங்க வேலி அமைத்தல், பழைய கட்டிட அமைப்புகளையும், மரங்களையும் அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டுதல், ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தை வேறு பகுதிக்கு மாற்றுதல் போன்ற பணிகள் தற்போது நடைபெற தொடங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai