ஹோம் /மதுரை /

மதுரையில் மின் திருட்டு - புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

மதுரையில் மின் திருட்டு - புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

மதுரை

மதுரை

Madurai TNEB | மதுரையில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.7.97 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், மின் திருட்டு தொடர்பான புகார்களை தெரிவிக்க போன் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க ; விவசாயம், குடிநீருக்காக வைகையில் தண்ணீர் திறப்பு - மதுரை மக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் டவுன், சின்னாளப்பட்டி, பழனி, நெய்க்காரப்பட்டி, சுவாமிநாதபுரம், நத்தம், கள்ளிமந்தயம், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், வாடிக்கையாளர்களிடம் ரூ.7 லட்சத்து 42,886 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.55,000 அபராதம் செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.7,97,886 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் எதுவும் தெரியவந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன் -9443037508 என்ற நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai