முகப்பு /மதுரை /

ரேஷன் அரிசி கடத்தலா? - மதுரைவாசிகள் இந்த தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம்...

ரேஷன் அரிசி கடத்தலா? - மதுரைவாசிகள் இந்த தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Ration Shop | ரேஷன் பொருட்கள் பதுக்கல் குறித்து, மதுரை பொது மக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

தமிழக அரசின் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் மாதம் அரிசி, எண்ணெய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, சர்க்கரை, கோதுமை என சமையலுக்கு தேவைப்படும் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வழங்கப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு மாதமும் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கி வருவது வழக்கம். ஆனால் சமீப காலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி போன்ற பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இனி இது போன்ற கடத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என்று மதுரை மக்களுக்கு தொலைபேசி எண் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து, மாநில குடிமைப் பொருள் வழங்கல் சி.ஐ.டி போலீசார், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’தமிழக அரசு, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகின்றது. இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி, கள்ளச்சந்தையில் விற்று, அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர்.

51ஆடு.. 100 சேவல்களை பலிகொடுத்து அன்னதானம்.. மதுரை மேலூரில் களைகட்டிய கறிவிருந்து..!

இவர்கள் பற்றியும், ரேஷன் பொருட்கள் பதுக்கல் குறித்தும், மதுரை பொது மக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும். இதற்காக, மாநில குடிமைப் பொருள் வழங்கல் சி.ஐ.டி போலீசில், 24 மணி நேரமும் செயல்படும், காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இது, கூடுதல் டி.ஜி.பியின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai