முகப்பு /மதுரை /

ஈஷா யோகா மகா சிவராத்திரி கொண்டாட்டம்- மதுரையில் செல்லும் ரத யாத்திரை பவனி

ஈஷா யோகா மகா சிவராத்திரி கொண்டாட்டம்- மதுரையில் செல்லும் ரத யாத்திரை பவனி

X
ஈஷா

ஈஷா ரத யாத்திரை

Madurai | மதுரையில் ஈஷா யோக மையத்தின் சார்பாக ரத யாத்திரை பவனி செல்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

கோயம்புத்தூரில் வெள்ளையங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இடம் தான் ஈஷா யோகா மையம். சத்குருவினால் உருவாக்கப்பட்ட இந்த இடம் முக்கியமான ஆன்மீக தலமாக திகழ்ந்துவருகிறது. தியானலிங்கம் தான் ஈஷா யோகா மையத்தின் சிறப்பாக திகழ்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் உடல், மனநலம் தேடி இங்கு செல்கின்றார்கள்.

இந்த ஈஷா யோகா மையத்தில்ஒவ்வொரு ஆண்டும்மாசி மாதம் தேய்பிறையில் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த மகா சிவராத்திரி திருவிழாவில் பல்வேறு முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபடுவார்கள்.

இந்த ஆண்டிற்கான மகா சிவராத்திரி பிப்ரவரி 18-ம் தேதி காலை 6:00 மணி முதல் மறுநாள் 6 மணி வரை ஈஷா யோகா மையத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

ஈஷா ரத யாத்திரை

இந்த சிவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் ஈஷா யோகா மையம் சார்பாக வண்டியின் மூலமாக ரத யாத்திரை பவனி நடைபெற்று வருகின்றது.

வகுப்பறையில் புகுந்த 6 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு.. மாணவிகள் அலறியடித்து ஓட்டம்

அந்த வகையில் மதுரையில் உள்ள அவனியாபுரம், வில்லாபுரம், ஜீவா நகர் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம், அண்ணா நகர், வண்டியூர் என பல்வேறு இடங்களில் சிவராத்திரியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்புடன் ரத யாத்திரை பவனி நடைபெறுகின்றது.

இந்த ரத யாத்திரை பவனியில் பொதுமக்கள் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்து வருகின்றார்கள்.

First published:

Tags: Local News, Madurai