ஹோம் /Madurai /

Madurai | ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

Madurai | ராமேஸ்வரம்-மதுரை சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Madurai | மதுரையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு புதிதாக தொடங்கப்பட்ட ரயிலின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் ராமேஸ்வரம் - மதுரை - ராமேஸ்வரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்படும் ரயிலானது பிற்பகல் 2.40 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கத்தில் நண்பகல் 12.30 மணிக்கு மதுரையில் புறப்படும் சிறப்பு ரயிலானது மாலை 4.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மானாமதுரை - சூடியூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக நண்பகல் 12.20 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் புறப்பட்டு செல்லும்.

அதாவது 80 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப பயணிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே 17 நாட்கள் இவ்வாறு ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும் என்று தெரியவந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Local News, Madurai