முகப்பு /மதுரை /

சித்திரைத் திருவிழாவிற்கு தயாராகும் ராமராயர் மண்டகப்படி.. குதூகலத்தில் மதுரை மக்கள்!

சித்திரைத் திருவிழாவிற்கு தயாராகும் ராமராயர் மண்டகப்படி.. குதூகலத்தில் மதுரை மக்கள்!

X
மதுரை

மதுரை கள்ளழகர்

Madurai chithirai festival | மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் தசாவதாரம் எடுக்கும் நிகழ்வையொட்டி ராமராயர் மண்டபம் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. 

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழாவானது,சித்திரை மாதம்பத்தாவது நாளான வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மீனாட்சி திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம், பூப்பல்லாக்கு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்துருதல் என சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண்பதற்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பாடாகி மதுரைக்கு வரும் கள்ளழகர் மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.

பின்பு மதுரையில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிக்கும் சென்று மகிழ்ச்சியும் பகுதியில் தீர்த்தவாரி நடைபெற்று மறுநாள் இப்பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகர் தசாவதாரம் எடுக்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெறும். இரவு 11 மணிக்கு தொடங்கப்படும் இந்த நிகழ்வு விடிய விடிய பல்வேறு அவதாரங்கள் எடுத்து வெகு விமர்சியாக நள்ளிரவு வரை கொண்டாடப்படும்.

இந்த நிகழ்வை ஒட்டி இப்பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியை சுத்தம் செய்து பெயிண்டுகள் அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியானது அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Madurai Chithirai Festival