தெற்கு மத்திய ரயில்வே, செகந்திராபாத் - ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு குறித்து மதுரை கோட்டம் அறிவிப்பு ஒன்றை வெளியீட்டு உள்ளது.
அதில் இன்று 21.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் 22.30 மணிக்கு ராமநாதபுரம் வந்து சேரும் ரயில் எண். 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் , மார்ச் 01, 2023 முதல் ஜூன் 28, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதிகள், ஏப்ரல் மாதம் 05, 12, 19, 26 ஆகிய தேதிகள் , மே மாதம் 03, 10, 17, 24, 31 ஆகிய தேதிகள், ஜூன் மாதம் 07, 14, 21, 28 ஆகிய தேதிகள் என மொத்தம் 18 நாட்கள் இந்த ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் 09.50 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
ரயில் எண். 07696 ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் மார்ச் 03, 2023 முதல் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் அமைப்பு , நிறுத்தங்கள் மற்றும் நேரம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
மேற்கூறிய வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. தேவையுள்ளவர்கள் முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Ramanathapuram, Train