முகப்பு /மதுரை /

ஒரு காலத்துல மதுரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஸ்பாட்..! எப்படி இருந்த ராஜாஜி பூங்கா இப்படி ஆகிருச்சே..!

ஒரு காலத்துல மதுரை 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஸ்பாட்..! எப்படி இருந்த ராஜாஜி பூங்கா இப்படி ஆகிருச்சே..!

X
மதுரை

மதுரை ராஜாஜி பூங்காவுக்கு இப்படி ஒரு நிலையா?

Madurai Rajaji park | மதுரை தமுக்கம் மைதானம் சாலையில் இருக்கக்கூடிய மதுரை ராஜாஜி பூங்கா போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. எனவே, இதனை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை தமுக்கம் மைதானம், காந்தி மியூசியம், ஆட்சியர் வளாகம் போன்ற மிக முக்கிய பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது தான்  ராஜாஜி பூங்கா. 90களின் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் ஃபேவரைட் ஸ்பாட் ஆக திகழ்ந்தது ராஜாஜி பூங்கா. பெற்றோர்களிடம் அடம்பிடித்து ராஜாஜி பூங்காவிற்கு அழைத்து வருவார்கள் அக்காலகட்ட சிறுவர்கள்.. மதுரை மட்டுமல்லாது சுற்றுப்புற ஊர்களில் இருந்தும் இந்த பூங்காவுக்கு மக்கள் வந்து கொண்டிருந்தனர்.  ஒரு காலத்தில் இந்த பூங்காவில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால். காலப்போக்கில் முறையான பராமரிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் இந்த பூங்கா இன்று மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. இப்படி பராமரிப்பு இன்றி இருக்கும் இந்த பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சரி என்ன மாதிரியான பராமரிப்பு இல்லாமல் இந்த பூங்கா காணப்படுகின்றது என்று தெரிந்து கொள்ள நேரடியாக சென்று பார்த்தோம். செல்லும் பாதையிலேயே இரு புறங்களில் உள்ள வேலிகள் ஆங்காங்கே முறையான பராமரிப்பு இல்லாமல் கீறிவிடும் வகையிலும், குழந்தைகள் விளையாடக்கூடிய சறுக்கு மரங்கள் உடைந்தும் காணப்பட்டன.

மதுரை ராஜாஜி பூங்காவின் இன்றைய நிலை

சறுக்கு மரங்களோடபேஸ்மெண்ட் ஆங்காங்கே உடைந்தும் துருப்பிடித்தும் காணப்பட்டது. இந்த  இடங்களில், விளையாடக்கூடாது என்று எச்சரிக்கும் விதத்தில்,வெறும் கயிறு மட்டுமே கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை அறியாமல், இங்கு வரும் குழந்தைகளுக்கு இதனுடைய ஆபத்து தெரியாமல் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

மதுரை ராஜாஜி பூங்காவின் இன்றைய நிலை

இது போக, இங்கு உள்ள ஊஞ்சல்கள் உடைந்தும், உட்காரும் மேடைகளில் கம்பிகள் தெரிகிற மாதிரியும், மின் விளக்குகள் உடைந்து  குப்பைக் கூடம் போலவே காணப்பட்டது. மேலும் இந்த பூங்காவின் மையப் பகுதியில் செயல்படாத நிலையில் நீரூற்று ஒன்று உள்ளது.   இந்த நீரூற்று பல ஆண்டுகளாகவே பராமரிப்பு இல்லாததால் குப்பையும் தூசியுமாக காணப்படுகின்றது.

பூங்காவில் செயல்படாத நிலையில் உள்ள நீரூற்று

இன்னும் சிறிது தூரம் உள்ளே சென்றால் கொலம்பஸ், டோரா ரைடு, ட்ரெயின் டிராகன், டிரெயின் ரோப் கார் போன்ற விளையாட்டு தலங்கள் காணப்படுகின்றது. நாம் போகும்பொழுது இங்கெல்லாம் பலரும் விளையாடிக்கொண்டிருந்தனர். இவற்றுள் இரண்டு மூன்று மட்டும் வேலை செய்யாமல் இருந்தது அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குழந்தைகள் அதிகமாக விரும்பக்கூடிய ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    எப்படி இருந்த பார்க் இது..!   இன்று போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் சூழ்ந்தும், காதல் ஜோடிகள் ஒதுங்கும் இடமாகவும் மாறிப்போயுள்ளது.  முகம் சுழிக்க வைக்கும் இந்த பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படுவது தான் ஆச்சரியமாக உள்ளது.

    First published:

    Tags: Local News, Madurai