முகப்பு /மதுரை /

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையை ஒரு வழி பாதையாக மாற்ற பரிந்துரை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாலையை ஒரு வழி பாதையாக மாற்ற பரிந்துரை

X
மதுரை

மதுரை ராஜாஜி மருத்துவமனை

Madurai Rajaji Hospital | மதுரையில் கோரிப்பாளையம் பகுதியிலுள்ள பனங்கல் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்ற கோரக்கை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பனங்கல் சாலையை ஒரு வழி பாதையாக மாற்ற போக்குவரத்து போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

தென் மாவட்டங்களில் மிகவும் முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. தினமும் இம்மருத்துவமனையில் வெளி நோயாளிகள் உள் நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரையைச் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து தான் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

போக்குவரத்து நெரிசல்:

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த கோரிப்பாளையம் பகுதியில் ராஜாஜி அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில்சிக்கி விடுகின்றது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவரது இருசக்கர வாகனங்களும், கார்களும் மருத்துவமனை வாகனங்கள் என அனைத்தும் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுகின்றது.

நோயாளிகள் வரும் வாகனங்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாததால் அவை கோரிப்பாளையம் பனங்கல் சாலையில் நிறுத்தப்படுகின்றது. இதனால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

வைகை வடகரை சாலை:

கோரிப்பாளையம் பனகல் சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி ஆட்சியர் அலுவலகம் முதல் கோரிப்பாளையம் வரை செல்லும் வாகனங்களை வைகையின் வடகரை பகுதியில் போடப்பட்டுள்ள புதிய ஆற்று சாலையில் மாற்றிவிட்டால் மருத்துவமனை சாலையில் போக்குவரத்து நெருக்கடி இருக்காது. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வைகை ஆற்றை ஒட்டியுள்ள சாலை வழியாக எளிதாக சென்று விடலாம்.

மதுரை வழியே செல்லும் 43 ரயில்கள் ரத்து- எந்தெந்த ரயில் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்...

மேலும் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் ஒரு வழி பாதையாக பயன்படுத்திக் கொண்டால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு பரிந்துரைத்துள்ளது.

First published:

Tags: Local News, Madurai