Home /madurai /

மதுரைவாசிகளை சுண்டியிழுக்கும் புலியடிஸ் போளி கடை - கேள்விப்படாத விதவிதமான போளி வகைகள்..

மதுரைவாசிகளை சுண்டியிழுக்கும் புலியடிஸ் போளி கடை - கேள்விப்படாத விதவிதமான போளி வகைகள்..

மதுரை

மதுரை புலியடிஸ் போளி கடை

Madurai Puliyadis Boli Stall | 1967 முதல் மதுரையில் செயல்பட்டு வரும் மக்கள் வரவேற்பு பெற்ற புலியடிஸ் போளி கடை குறித்த ஒரு ஸ்பெஷல் தொகுப்பு..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai
விதவிதமான உணவுகளுக்கு பெயர் போன நம் மதுரையில் பல ஆண்டுகளாக ஒரே வகையான பலகாரத்தை மட்டுமே வைத்து வியாபாரம் நடத்தி வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம் என்பது பலரது கருத்து. ஆனால் தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்யாமல் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு மதுரை புலியடிஸ் போளி கடை ஒரு சிறந்த உதாரணம்.

திருமலை நாயக்கர் மகால் பின்புறத்தில் 1967ஆம் ஆண்டு, 55 ரூபாய் முதலீட்டில் ரத்தினம்மாள் என்ற பெண்மணியால்  சிறியளவில் போளி கடையாக ஆரம்பிக்கப்பட்டு இன்று 55 ஆண்டுகளுக்கு பின் மதுரை மக்கள் அனைவரும் அறிந்த ஒரு மினி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது இந்த புலியடிஸ் போளி கடை.

இக்கடை  குறுகிய தெருவில் அமைந்திருந்தாலும் கூட மதுரை வாசிகள் பலரும் தொடர்ச்சியாக இந்த கடைக்கு தேடி வந்த வண்ணம் உள்ளனர், சமயலறையிலோ எந்நேரமும் போளி சுடப்பட்டு சுட..சுட..மக்களுக்கு போளி விற்பனை செய்யப்படுகிறது.
ரத்தினம்மாளுக்கு பிரகாக அவரது மகன் இந்த கடையை நடத்தி வந்துள்ளார், அதன் பின் இன்று மூன்றாவது தலைமுறையாக அவரது பேரன் பாலாஜி அவர்கள் இந்த கடையை தனது கட்டுப்பாட்டில் திறம்பட நடத்தி வருகிறார்..

இதையும் படிங்க:  பாண்டிய மன்னனை மன்னிப்பு கேட்க வைத்த மாணிக்கவாசகர்- திருவாதவூர் கோவில் வரலாறு தெரியுமா?

அவர் நம்மிடம் பேசுகையில், “இந்த கடையை எனது பாட்டி  சிறிய தொழிலாக ஆரம்பித்தார், இன்று அது எங்களது வாழ்விற்கு ஆதாரமாக மாறியுள்ளது. மேலும் போளி மட்டுமே இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் சில போளி வகைகள் மற்றும் அதிரசம், முறுக்கு போன்ற பலகாரங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார்.

போளி வகைகள்:

தேங்காய் போளி, பருப்பு போளி, முந்திரி போளி, மசாலா போளி, ரவை போளி, கோதுமை போளி , பன்னீர் போளி, காளான் போளி என பலரும் அறிந்திராத பல வகையான போளி இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த புலியடிஸ் போளி கடையானது மதுரை திருமலை நாயக்கர் மகால் பின்புறம் உள்ள மகால் மூன்றாவது தெருவில் அமைந்துள்ளது. இதுவரை இந்த கடையை பற்றி தெரியாதுனு சொல்றவங்க, இந்த கடைக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான போளியை வாங்கி ஒரு முறை சுவைக்கலாம்..!

தொடர்புக்கு: புலியடிஸ் போளி கடை - 098430 49291

 

puliyadis boli stall
புலியடிஸ் போளி கடை, மதுரை
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி