ஹோம் /மதுரை /

மதுரை | அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரிசுகளை அள்ளிய 'புலி காளை'- வளர்ப்பு முறை தெரியுமா?

மதுரை | அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரிசுகளை அள்ளிய 'புலி காளை'- வளர்ப்பு முறை தெரியுமா?

X
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு காளை

Madurai | 2023-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் புலி காளை சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை என்றாலே மதுரை மல்லி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வீர விளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான். அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது ஜனவரி 15ஆம் தேதிஅவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி காளைகள்,சிறப்பாக விளையாடியவீரர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டிற்கு அடித்தளமே காளைகள் தான். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு சுமார் 2 மாதங்களுக்கு முன்பேகாளைகளுக்குசத்தான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் கொடுத்து காளைகளை வாடிவாசலில் இறக்குவதற்கு ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் தயார்படுத்துவார்கள்.

காளைகளை மட்டும் வாடிவாசலில் இறக்கி விட்டால் வீரர்களுக்கு ஆட்டம் காட்டி நின்னு விளையாடிவிட்டு செல்லும்.

அந்த வகையில் மதுரையின் மேலமடைபிரகாஷ் வளர்த்த புலிக்காளை இந்த ஆண்டு அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீரர்களை வீழ்த்தி சிறப்பாக ஆட்டம் காட்டி டிவி, சைக்கிள், தங்க நாணயங்கள், அண்டா, சேர் என பல்வேறு பரிசுகளை தட்டி தூக்கியது.

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவிகள்.. 1 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட மதுரை போலீஸார்

அந்த காளை வளர்ப்பு குறித்து பேசிய பிரகாஷ், ‘காயை குழந்தைப் போல வளர்ப்பதாகவும், தொடக்கத்தில் காளை போட்டிகளில் தடுமாறியது. தற்போது மிகச் சிறப்பாக விளையாடுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் டி.வி, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளை வென்று கொடுத்தது’ என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai