ஹோம் /மதுரை /

இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மதுரையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் 

இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. மதுரையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Madurai News: தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்,நாளை ( 25-11-2022 ) நடைபெறவுள்ளது.

  தனியார் வேலை வாய்ப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித் தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

  இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐமற்றும் டிப்ளமோ படித்த வேலை தேடுபவர்கள்கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.

  வேலை தேடுபவர்கள்மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

  இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை தேடுபவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  இதையும் படிங்க : மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் இவைதான்..

  இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் தெரிவித்துள்ளது.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Job, Local News, Madurai, Tamil News