Home /madurai /

அதிகவேக ஃபைபர் இன்டர்நெட் சேவையில் அதிரடி திட்டங்களை அறிவித்த பிஎஸ்என்எல்- விவரங்களைத் தெரிந்துகொள்க

அதிகவேக ஃபைபர் இன்டர்நெட் சேவையில் அதிரடி திட்டங்களை அறிவித்த பிஎஸ்என்எல்- விவரங்களைத் தெரிந்துகொள்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஃபைபர் நெட்டின் புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மதுரை வட்டாரத்தில் சுதந்திர தினத்தையொட்டி பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 275 ரூபாய்க்கு அதிவேக பைபா் இணைய எப்டிடிஎச் சேவை அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இது மற்ற போட்டி நிறுவனங்களையும் பிரீடம் 75 எனும் குறுகிய கால சலுகையை அறிமுகம் செய்து திக்கு முக்காட வைத்துள்ளது.

    அதிவேக பைபா் இணைய எப்டிடிஎச் சேவையில் மாதம் ரூ.449 அல்லது ரூ.559 திட்டத்தில் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாள்களுக்கு ரூ. 275 மற்றும் ஜிஎஸ்டி வரி மட்டும் செலுத்தினால் போதுமானது.

    அவர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டிஸ்னி, ஹாட்ஸ்டாா் உள்ளிட்ட பல ஓடிடி தளங்கள் சேவைகள் இலவச இணைப்பாக உள்ள பல புதிய திட்டங்களையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    மேலும், ஓடிடி தளத்துத்துடன் கூடிய மாதம் ரூ.999 திட்டத்தில் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 75 நாள்களுக்கு வெறும் ரூ.775 மற்றும் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதுமானது.

    இச்சலுகை ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பா் 13 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும் பிளான் குறித்த விவரங்களுக்கு 94860-25100 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் மதுரை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி