முகப்பு /மதுரை /

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசுத் தலைவர் எழுதிய குறிப்பு என்ன தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசுத் தலைவர் எழுதிய குறிப்பு என்ன தெரியுமா?

திரௌபதி முர்மு

திரௌபதி முர்மு

Madurai president visit | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று காலையில் டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

மதுரை விமான நிலையம் வந்த அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு காரில் சென்றார். அவரை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் வருகை தந்த குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

திரௌபதி முர்மு எழுதிய குறிப்பு

இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தார்.

பின்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வருகை பதிவேட்டில் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து பிரார்த்தனை செய்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளேன். கோவிலின் பிரம்மாண்ட கோபுரங்கள், எழுச்சியூட்டும் சிற்பக்கலை, கட்டுமான அமைப்பு ஆகியவை தெய்வீக அனுபவத்தை அளித்தன. மக்கள் நலனுக்கும், தேசத்தின் செழிப்புக்கும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Local News, Madurai, President Droupadi Murmu