முகப்பு /மதுரை /

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. சித்திரை பொருட்காட்சிக்கு தயாராகும் தமுக்கம் மைதானம்!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. சித்திரை பொருட்காட்சிக்கு தயாராகும் தமுக்கம் மைதானம்!

X
மதுரை

மதுரை தமுக்கம் பொருட்காட்சி

Madurai exhibition | கோடை விடுமுறையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் சித்திரை பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மக்களுக்கு சித்திரை மாதம் வந்தாலே கொண்டாட்டம்தான். உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கொண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, அதே சமயத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் போடப்படும் சித்திரை பொருட்காட்சி மதுரை மக்களால் கொண்டாடப்படக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் சித்திரை பொருட்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியில் 27 அரசுத்துறை ஸ்டால்களும், 12 அரசு சார்பு நிறுவனங்களின் ஸ்டால்களும், புத்தகம், ஃபேன்சி பொருட்கள், உணவு கடைகள், விளையாட்டு பொருட்கள், துணிக்கடைகள் என 25க்கும் மேற்பட்ட தனியார் ஸ்டால்கள் போடப்படுகின்றன.

நவீன கலைஞர்கள் மூலமாக பொருட்காட்சியின் நடுவே கலைநிகழ்ச்சி மேடையும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுபோக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்அதிகமாக விரும்பி விளையாடக்கூடிய உயரமான ராட்டினங்கள், பேய் வீடு, டோரா டோரா, போட்டிங் ரைட், டிராகன் ரைட் போன்ற பல்வேறு வகையான விளையாட்டு தளங்களுக்கான ஏற்பாடுகளும் தீவிரமா செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க | மதுரை மக்களே உஷார்.. இந்த ரூட்டில் எல்லாம் ரயில் சேவை மாற்றம்!

மேலும் இந்த கண்காட்சியை ஏப்ரல் 29ஆம் தேதி அமைச்சர் மூர்த்தி, தியாகராஜன், மேயர் இந்திராணி பொன் வசந்த், கலெக்டர் அனீஸ் சேகர் ஆகியோர் மூலமாக திறக்கப்பட்டு தினமும் மாலை 4 மணியிலிருந்து 10 மணி வரைக்கும் நடைபெற இருக்கின்றது.

ஏப்ரல் 29 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளும், பூப்பல்லாக்கு நடைபெறும் அன்று மட்டும் இரவு முழுவதும் கண்காட்சி திறக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai