முகப்பு /மதுரை /

மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா.. கள்ளழகர் இறங்க தயார் நிலையில் வைகை ஆறு..

மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா.. கள்ளழகர் இறங்க தயார் நிலையில் வைகை ஆறு..

X
மதுரையில்

மதுரையில் களைகட்டும் சித்திரை திருவிழா

Madurai Chithirai Festival 2023 : மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திலிருந்து கள்ளழகர் புறப்பாடாகி வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரை மதுரையே களைக்கட்டும். அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரையே விழாக்கோலம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் மிகவும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படக்கூடிய நிகழ்வுதான் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் புறப்பாடாகி மதுரை வந்து சேரும் அழகரை எதிர் சேவை செய்து வரவேற்பு செய்து பிறகு தங்க குதிரையில் கள்ளழகர் தல்லாகுளம் பெருமாள் கோவிலிலிருந்து புறப்பாடாகி கோரிப்பாளையம் வழியாக ஏவி பாலம் அருகில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும்.

கள்ளழகர் இறங்க தயார் நிலையில் வைகை ஆறு

இந்நிகழ்வு மே 5ம் தேதி நடைபெற இருப்பதால் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றை தயார்படுத்தும் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்றுப்பகுதியில் ஜல்லி மற்றும் ஆற்று மணல் கொண்டுவரப்பட்டு சமன்படுத்தும் இயந்திரம் மூலம் மண்டகப்படியை தயார் செய்யும் பணியும், அழகர் ஆற்றில் இறங்கும் வகையில் ஆற்றில் உள்ள தொட்டி சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து தயார் செய்யும் பணியும் நடக்கிறது.

மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்நாளில் கள்ளழகரை காண பக்தர்கள் அதிகமாக இந்த பகுதியில் கூடுவதினால் அழகர் இறங்கும் வைகை ஆறு முழுவதும் மணல் கொண்டு வரப்பட்டு சமன்படுத்தும் பணியும் தடுப்பணையிலிருந்து தண்ணீர் சீராக போவதற்கான பணியும் செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுபோக அழகர் இறங்கும் ஆற்றுப்பகுதியில் எல்இடி விளக்குகள் ஆங்காங்கே பொருத்தும் பணியும், அழகர் இறங்கும் ஆற்றுப்பகுதியில் இருக்கும் மண்டகப்படியில் பந்தல் அமைக்கும் பணியும் ஏவி பாலும் முழுவதும் பெயிண்ட் அடிக்கும் பணிகள் என்று கள்ளழகர் இறங்கும் வைகை ஆறு முழுவதும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

First published:

Tags: Local News, Madurai