Home /madurai /

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மதுரை வடக்கு பெருநகர் கோட்டம் ஐ.டி.பார்க் இலந்தைகுளம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்பட இருக்கின்றது.

    மின் கம்பங்கள், மின் மாற்றிகள், பழுது நீக்கப்பட்டும், அவற்றின் மீதுள்ள மரம் செடி கொடிகள் அகற்றப்பட்டு சீரான மின் விநியோகம் செய்ய ஏதுவாக பாரமரிப்பு பணிக்காக ஒரு நாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதன்படி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை வடக்கு பெருநகர் கோட்ட ஐடி பார்க் இலந்தை குளம் துணை மின்நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்:-

    இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், ஆம்பளகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதிஸ்வரன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பெருநகர் வடக்கு மின்வாரிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Madurai

    அடுத்த செய்தி