ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தின் இந்த ஊர்களிலெல்லாம் நாளை மின் தடை

மதுரை மாவட்டத்தின் இந்த ஊர்களிலெல்லாம் நாளை மின் தடை

நாளைய மின்தடை பகுதிகள்

நாளைய மின்தடை பகுதிகள்

Madurai Power Cut | மதுரை மாவட்டம்  சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம், வாடிப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம், வாடிப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 29ம் தேதி) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் சேந்தமங்கலம் மற்றும் தேவசேரி பீடர், வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் ராயபுரம் பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : காந்தளூர் அருவி முதல் அமராவதி அணை வரை.. உடுமலையை சுற்றி மட்டும் இத்தனை சுற்றுலா தலங்களா?

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி சோழவந்தான் மோகன் பிளாட், ரிஷபம், திருமால் நத்தம், ஆலங்கட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown