முகப்பு /மதுரை /

மதுரை மக்களுக்கு முக்கிய செய்தி... நாளை இந்த பகுதிகளில் மின்தடை.!

மதுரை மக்களுக்கு முக்கிய செய்தி... நாளை இந்த பகுதிகளில் மின்தடை.!

மின் தடை

மின் தடை

Madurai | மதுரை மாவட்டம், பசுமலை எல்லீஸ் நகர் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (27-04-2023) வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

  • Last Updated :
  • Madurai, India

பராமரிப்பு பணி காரணமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படவுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை அனுப்பி, மின் மாற்றி,மின் விநியோகப் பெட்டி உதவியுடன் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்கிறது. மின் வாரிய சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால், அதிக வெப்பத்துடன் இருக்கும். அதனால் அவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்த விவரம் பத்திரிகைகள், குறுஞ்செய்திகள் மூலமாக நுகர்வோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மதுரை மாவட்டம், நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை ) நடைபெறவுள்ளதாக மதுரை அரசரடி மேற்கு பெருநகர் செயற்பொறியாளர் எஸ்.ராஜா உசேன் தகவல் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி II.M.S. காலனி, ஏ.ஆர். தோப்பு, வசுந்தரா குடியிருப்பு வளாகம், அக்ரிணி குடியிருப்பு வளாகம், ஆண்டான் புரம், ராமலிங்கம் நகர், வசந்த் நகர், இந்திரா காந்தி தெரு, பழைய மீனாட்சி மில் காலனி, ராவுத்தர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நாளை (27-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுரை அரசரடி மேற்கு பெருநகர் செயற்பொறியாளர் எஸ்.ராஜா உசேன் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Power cut