முகப்பு /மதுரை /

மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை... 

மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை மின் தடை... 

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (17-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் திருப்பாலை, வாடிப்பட்டி பகுதிகளிலும், 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் சமயநல்லூர் மற்றும் கொண்டையம்பட்டி பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்:

திருப்பாலை மற்றும் மகாத்மாகாந்தி நகர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலங்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி.டி. காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், டி.டபிள்யூ.ஏ.டி. காலனி, சொட்டிகளம், சண்முகா நகர். விஜய் நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், இ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், விஸ்வநாதபுரம், மகாத்மாகாந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பணங்காடி, மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி துணை மின் நிலையம் மற்றும் அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வாடிப்பட்டி பைபாஸ் ரோடு, பாலமரத்தான் நகர், வி.எஸ். நகர், தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன் கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமநாயக்கன்பட்டி, நரிமேடு, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி கள்ளர் மடம், வல்லபகணபதி நகர், மகாராணி நகர், ஆர்.வி நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூழாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, ரிஷபம், திருமால் நத்தம், ஆலங்கொட்டாரம், ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், அங்கப்பன் கோட்டம், சமத்துவபுரம், தாடகாசிபுரம், சொக்கலிங்கபுரம், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : வடிவேலு நடித்த ‘கைப்புள்ள வீடு’ எங்கிருக்கிறது தெரியுமா? - அடடே.. முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

மேலும், கொண்டையம்பட்டி துணை நிலையத்திற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி, கள்வேலிபட்டி, மாரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம், அய்யனகவுண்டம்பட்டி, செம்புக்குடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகபட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிபட்டி ஆகிய பகுதிகளிலும், அய்யங்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அய்யங்கோட்டை, சி.புதூர், சித்தாலங்குடி, மூலக்குறிச்சி, வைரவ நத்தம், ஆனைகுளம், கோத்தாரி, கே.எம்.ஆர். நகரி, எஸ்.என்.பி ஏரியா, தனிச்சியம் அக்ரி உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown