மதுரை மாவட்டம் அவனியாபுரம், வண்டியூர் உள்ளிட்ட சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (09-02-2023) இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை அனுப்பானடி, தெப்பம், அவனியாபுரம் மற்றும் வண்டியூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பானடி பகுதிகள்:
அனுப்பானடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால்பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்காநகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி. காலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது.
மதுரை தெப்பம் பகுதி:
தெப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சிநகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு,
சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திரா நகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப்பானடி கிழக்குப்பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அவின்யூ மற்றும் திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அவனியாபுரம் பகுதிகள்:
அவனியாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்கு பிள்ளை நகர் முழுவதும், ஜெயபார் சிட்டி 4 மற்றும் 5, பைபாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், வைகை வீதிகள், வள்ளலானந்தாபுரம்,
Must Read : உதகையில் சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டிய 10 முக்கிய சுற்றுலா தலங்கள்...
ஜெ.ஜெ. நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், ஜவகர் நகர், ஜெயபாரத் சிட்டி, திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, காசி தோட்டம், பெரியரத வீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகர் பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், குடியிருப்பு, சின்ன உடைப்பு மற்றும் ஏர் போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வண்டியூர் பகுதியில் மின் தடை:
இதே போல, வண்டியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வண்டியூர், பி.கே.எம். நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்பு மலர் தெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அஸ்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown