ஹோம் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - இதில் உங்க பகுதி இருக்கா?

மதுரை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - இதில் உங்க பகுதி இருக்கா?

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, மேலூர் மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (21-12-2023) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், மடீட்சியா, அண்ணாமாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ஆஸ்பத்திரி வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில்தெரு,

சின்னகண்மாய் தெரு, எச்.ஏ.கான் ரோடு, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல். தல்லாக்குளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப், தமுக்கம் பகுதிகளின்ல் மின் வினியோகம் இருக்காது.

மேலும், சேவாலயம் ரோடு, ஆர்.ஆர்.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி ரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜீவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1 முதல் 7ஆவது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ் வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள்,

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அன்னைநகர், எல்.ஐ.ஜி. காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணா நகர், ராமவர்மா நகர், பி.ஆர்.சி. புதூர், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல் அமீன்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? நெல்லை அரசு மருத்துவர் விளக்கம்

மேலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் மேலூர், தெற்குதெரு, டி.வள்ளாலப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, பதினெட்டாங்குடி, பனங்காடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown