ஹோம் /மதுரை /

மதுரையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை - உங்க ஏரியா இருக்கானு பாருங்க..!

மதுரையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை - உங்க ஏரியா இருக்கானு பாருங்க..!

மதுரை

மதுரை

Power Cut Areas In Tomorrow At Madurai | மதுரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்டம்பர் 30) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இதனால், இந்த பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிகல், மதுரை திண்டுக்கல் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மதுரை கரடிப்பட்டியில் தொல்லியல் எச்சங்கள் - தூங்கா நகரத்துக்கு மேலும் சிறப்பு

இதேபோல், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா ஆகிய பகுதிகளிலும் மின் தடை ஏற்படும் என்று சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai