முகப்பு /மதுரை /

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பிப்ரவரி 4ம் தேதியன்று மின்தடை - உங்க பகுதி இருக்கா பாருங்க..

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பிப்ரவரி 4ம் தேதியன்று மின்தடை - உங்க பகுதி இருக்கா பாருங்க..

அண்ணா பஸ் ஸ்டாண்ட் மாட்டுத்தாவணி துணை மின் நிலையங்களில் பிப்ரவரி 4 மின்தடை.

அண்ணா பஸ் ஸ்டாண்ட் மாட்டுத்தாவணி துணை மின் நிலையங்களில் பிப்ரவரி 4 மின்தடை.

Madurai Power Cut | மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையம், அண்ணா பேருந்து நிலைய துணை மின் நிலையங்களில் வரும் சனிக்கிழமை (பிப் 4) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின் தடை ஏற்பட உள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் பிப்ரவரி 4ம் தேதியன்று மாட்டுத்தாவணி துணை மின் நிலையம், அண்ணா பேருந்து நிலைய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இந்த இரு மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் மின் தடை ஏற்படும் பகுதிகள் கீழ்கண்டவாறு:

அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், காந்தி அருங்காட்சியகம், கரும்பாலை பகுதிகள், டாக்டா் தங்கராஜ் சாலை, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு, காந்திநகா், மதிச்சியம், ஷெனாய் நகா், குருவிக்காரன் சாலை, கமலாநகா், மருத்துவக் கல்லூரி, பனகல் சாலை, ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாா்புரம், கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, செல்லூா், பாலம் ஸ்டேஷன் சாலை.

முனிச்சாலை:

கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்- தல்லாகுளம், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் சாலை, முனிச்சாலை, வெற்றிலைப்பேட்டை, சுங்கம்பள்ளிவாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50 அடி சாலை, குலமங்கலம் சாலை, பூந்தமல்லிநகா், தாமஸ் வீதி,

மாட்டுத்தாவணி:

நரிமேடு பிரதான சாலை, மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகா், புதூா், அழகா்கோயில் பிரதான சாலை, காந்திபுரம், சா்வேயா் காலனி, சூா்யா நகா், கொடிக்குளம், இவற்றின் சுற்றுப் பகுதிகள். மின்தடை ஏற்படும் என தெரிக்கவிபட்டுள்ளது

First published:

Tags: Local News, Madurai, Power cut