ஹோம் /மதுரை /

மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள் - உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள் - உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

மதுரையில் மின்தடை பகுதிகள்

மதுரையில் மின்தடை பகுதிகள்

Madurai Power cut Areas | மதுரை வடக்கு மின்கோட்டத்திற்கு உட்பட்ட காந்திநகர் துணை மின்நிலையம், திருப்பாலை துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை வடக்கு மின்கோட்டம் காந்திநகர் துணை மின்நிலையம், திருப்பாலை துணை மின்நிலையங்களில் நாளை (நவம்பர் 2) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே மகாத்மா காந்திநகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி பகுதிகளில் மின்சாரம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மீனாட்சிபுரம், வள்ளுவர் காலனி, கலை நகர், வ.உ.சி.நகர், குரு நகர், ஜே.என்.நகர், ஜே.ஜே.நகர், காலாங்கரை, மூவேந்தர்நகர், சென்ட்ரல் பேங்க் காலனி, பூந்தமல்லிநகர், மீனாம்பாள்புரம், முடக்காத்தான், ஆலங்குளம், எஸ்.வி.பி.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

Must Read : கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

மேலும் திருப்பாலை துணை மின்நிலையத்தின் நாராயணபுரம் பீடரின் திருப்பாலை, கோபாலபுரம், கிருஷ்ணாநகர், பாரத்நகர், ஏழில்நகர், அய்யாவு தேவர், ஸ்ரீநகர், அய்யப்பன் நகர், பேங்க்காலனி, நாகனாகுளம், நாராயணபுரம், அய்யர்பங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என மதுரை வடக்கு கோட்ட மின்வாரிய என்ஜினீயர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, பொதுமக்கள் மின்சார தேவை இருப்பின் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்கள். மேலும், தண்ணீரை நிரப்பிக்கொள்ளுதல் உள்ளிட்ட தேவையான முன்னேற்பாடுகளை செய்து அசௌகரியத்தை தவிரித்திடுங்கள்.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown