ஹோம் /மதுரை /

பொன்னியின் செல்வன் படம் குறித்து பாண்டிய தேசத்தின் பார்வை என்ன?

பொன்னியின் செல்வன் படம் குறித்து பாண்டிய தேசத்தின் பார்வை என்ன?

பொன்னியின்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan Movie Review | மதுரையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 60க்கும் மேற்பட்ட திரைகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று காலை 4.30 மணி அளவில் வெளியானது.. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

தமிழக மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பிர்க்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் 3 ஆண்டுகளாக இந்த படத்தின் உருவாக்க பணிகள் நடைபெற்று இறுதியாக தற்போது இத்திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கல்கி அவர்கள் எழுதி 1955இல் வெளியிட்ட பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மதுரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் பூர்த்தி செய்ததா என்பதை தற்போது காணலாம்.

மதுரையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 60க்கும் மேற்பட்ட திரைகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று காலை 4.30 மணி அளவில் வெளியானது..  நாவலை படிக்காமல் புதிதாக படம் பார்த்த பலருக்கும் இதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

வெற்றி திரையரங்கம், மதுரை

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் அவர்களது இசையும், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும், நந்தினி என்ற கதாபாத்திர வடிவமைப்பும் பெரிதும் பலம் சேர்ப்பவையாக இருந்ததாகவும் கூறினர்.

படத்தில் பெரிய குறைகள் என்று எதுவும் இல்லாத பட்சத்திலும் கதை களத்தில் தமிழ் மன்னர்களான பாண்டியர்களை தரம் தாழ்த்தி கான்பித்துள்ளதாகவும், இந்த படம் புனையப்பட்ட கதை என்பதை மறந்து பலரும் இதனை வரலாறு என்று நம்பி தமிழர் வரலாற்றை இந்த படத்தின் மூலம் பலர் மாற்றி புரிந்துகொள்வதாகவும் சில நாவளர்கள், மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒட்டுமொத்தமாக பார்த்தோமேயானல் படம் மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது, எனினும் இனி படம் பார்க்கவிருப்பவர்கள் இதனை வரலாறு என்று தப்பாக புரிந்துகொள்ளாமல் கற்பனை கதையாக மட்டுமே பார்ப்பது நல்லது என்பது பலரது கருத்தாக உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Local News, Madurai, Ponniyin selvan