ஹோம் /மதுரை /

திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில் - மதுரை மாவட்ட பயணிகள் கவனத்திற்கு...

திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில் - மதுரை மாவட்ட பயணிகள் கவனத்திற்கு...

பொங்கல் சிறப்பு ரயில்

பொங்கல் சிறப்பு ரயில்

Madurai District | மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து, தென்னக ரயில்வே சார்பில் கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, வருகிற 13ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) முதல் 18ஆம் தேதி வரை திண்டுக்கல்-கோவை இடையே இரு மார்க்கங்களிலும் ஒரு முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் (வ.எண்.06077) கோவையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் (வ.எண்.06078) திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயில்கள் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், மதுரையில் உள்ள பயணிகளை பொறுத்தமட்டில், குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்.16128) மதுரையில் இருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றடையலாம். அங்கிருந்து திண்டுக்கல்-கோவை சிறப்பு ரயிலில் கோவைக்கு பயணம் செய்ய முடியும்.

Must Read : 5 மாவட்ட மக்கள் பொங்கல் வைத்து போற்றும் ஆங்கிலேயர் பென்னிகுவிக்! - யார் இவர்?

மேலும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்.16321) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் செல்லலாம். பின்னர், அங்கிருந்து சிறப்பு ரயிலில் பயணித்தால், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவையை சென்றடையலாம் .  வேகமாக கோவை செல்ல விரும்பும் பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்து, இரவு 7 மணிக்கு கோவையை சென்றடையலாம். எனவே, ரயில் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கெண்டு பயன்பெறலாம்.

First published:

Tags: Local News, Madurai, Pongal 2023, Special trains