தமிழகத்தில் முதன்முறையாக மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர் பாடல் பொறித்த தங்க ஏடு கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் பகுதியில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஏடகநாதர் ஏழுவார்குழலி அம்மன் கோவிலில் இந்துசமய அறநிலைய துறையால் நியமிக்கப்பட்ட ஒலைச்சுவடிகள் திட்டப்பணி குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஓலைச்சுவடி கட்டுடன் திருஞானசம்பந்தர் எழுதிய பாடல் அடங்கிய தங்க ஏடு ஒன்றையும் கண்டறிந்தனர். அது கூன் பாண்டியன் மன்னன் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு திரும்பியதை வாழ்த்தும் வகையில் திருஞானசம்பந்தர் பாடிய "வாழ்க அந்தணர்" பாடல் இடம்பெற்றுள்ளது.
இதையும் வாசிக்க: மாதம் ரூ.58 ஆயிரம் வரை சம்பளம் : திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
இதன் எழுத்து வடிவமைப்பின் அடிப்படையில் இது நூற்றாண்டுகளுக்குள் எழுதப்பட்ட ஏடு எனவும், கோவிலில் தங்க ஏடு கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை எனவும் தமிழகத்தில் வேறு எங்கும் தங்கத்திலான ஏடுகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை எனவும் ஓலைச்சுவடி திட்டப்பணி குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai