Home /madurai /

தொழில் தொடங்க விரும்பும் மதுரைவாசிகளே.. ரூ.17.5 லட்சம் வரை மானியம் கிடைக்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

தொழில் தொடங்க விரும்பும் மதுரைவாசிகளே.. ரூ.17.5 லட்சம் வரை மானியம் கிடைக்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..

மதுரை

மதுரை

Madurai District News | 60 வயதிற்கு உட்பட்ட மதுரைவாசிகள் தொழில் தொடங்க விரும்பினால் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தில் மானியத்துடன் நிதியுதவி பெறலாம். அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
தனிநபர், சொசைட்டி, டிரஸ்ட் மற்றும் 60 வயது வரை உடைய  மகளிர் குழுவினர் தொழில் தொடங்க விரும்பினால் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத்திட்டம் அதற்கு (PMEGP) துணைபுரிகிறது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத்திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில் தொடங்குவதற்கான மதிப்பீடு ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும், சேவைத் தொழில்கள் செய்வதற்கான மதிப்பீடு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.17.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவினர் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கினால் 15 சதவீதமும், கிராமப்புறத்தில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற பிரிவினர் நகரத்தில் தொழில் தொடங்கினால் 25 சதவீதம், கிராமத்தில் தொடங்கினால் 35 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில பயன் பெற 18 முதல் 60 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆடு, மாடு, கோழிப்பண்ணை, மாட்டு கொட்டகை அமைக்க தற்போது கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் குழுவாகவோ தனியாகவோ மாவு மில், எண்ணெய் உற்பத்தி ஆலை, உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் செய்யலாம். இவ்வாறு தொழில் செய்ய விரும்புவோர் மதுரை மாவட்ட தொழில் மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp என்ற இணையதளத்தில்அறிந்துகொள்ளலாம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி