ஹோம் /மதுரை /

மதுரை வைகையாற்றில் அதிகளவு வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை... தடைபடும் நீரோட்டம்... 

மதுரை வைகையாற்றில் அதிகளவு வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை... தடைபடும் நீரோட்டம்... 

வைகை

வைகை

Madurai | வைகை கரைகளில் அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை யானைக்கல் தரைப்பாலத்தில் நடைமேடை அமைப்பதற்காக ஆற்றுக்குள் தூண்கள் அமைக்கபட்டதால் தூம்புகள் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் அப்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து நீரோட்டம் தடைபட்டு கிடக்கிறது.

வைகை ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் மதுரை மாநகர் பகுதியில் 7 இடங்களில் தரைப்பாலம் மற்றும் உயர்மட்ட தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குருவிக்காரன் சாலை மற்றும் ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்ட பின் அங்கிருந்த தரை பாலங்கள் முற்று முழுவதுமாக இடிக்கப்பட்டு ஆற்றின் நீரோட்டம் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டது.

எனவே அதைப்போலவே பழமையான யானைக்கல் தரைப்பாலத்திர்க்கு மேல் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தில் கைப்பிடி சுவர் இல்லாத நிலையில் கைப்பிடி சுவர் அமைப்பதற்கான தூண்கள் மாநகராட்சி சார்பில் பாலத்தின் இரு புறமும் அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க : மதுரை மீனாட்சியின் நிஜப்பெயர் முதல் சாதி வரி நீக்கம் வரை... கல்வெட்டு ஆய்வு முடிவுகள் சொல்லும் புதிய உண்மைகள்...

இதனால் பாலத்தின் அடியில் உள்ள தூம்பு வழியாக ஆற்று நீர் செல்வது தடைபட்டது. எனவே இதன் காரணமாக அப்பகுதியை சுற்றிலும் தற்போது ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. பின்னாளில் கைப்பிடி சுவர் அமைக்கப்படாது என மாநகராட்சி சார்பில் தேர்விக்கப்பட்டு அம்முடிவானது கைவிடப்பட்ட நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட தூண்கள் மட்டும் அப்படியே உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து தற்போது யானைக்கல் தரைப்பாலத்தில் தற்போது வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை சார்பில் கைப்பிடி தூண்களை அகற்ற கோரி மதுரை மாநகராட்சிக்கு ஆணை வந்துள்ளதால் அந்த தூண்கள் கூடிய விரைவில் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai