முகப்பு /செய்தி /மதுரை / மேலூரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

மேலூரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

மதுரை - மேலூரில் பெட்ரோல் பாம் வீச்சு

மதுரை - மேலூரில் பெட்ரோல் பாம் வீச்சு

Madurai | மேலூரில் சாலையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் மேலூர் - சிவகங்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் மதுபாட்டில் மற்றும் காலி பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது மலம்பட்டி அருகே உள்ள நான்கு வழிச்சாலை பாலத்தின் கீழே, அவர்கள் கொண்டு சென்ற பெட்ரோல் பாட்டில் கீழே விழுந்து உடைந்துள்ளது.

அதன்பின், பெட்ரோல் நிரப்பி திரியிட்டு வைத்திருந்த பிளாஸ்டிக் கேனையும் பற்ற வைத்து சாலையில் வீசியுள்ளனர். அது ஏற்கனவே உடைந்த பாட்டிலில் இருந்து சிதறி இருந்த பெட்ரோலில் பற்றி எரிய தொடங்கியுள்ளது. உடனே பெட்ரோல் கேனை சாலையின் ஓரத்தில் வீசிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க... மிரட்டுமா மோக்கா புயல்..! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

இதுகுறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Bomb, Madurai