ஹோம் /மதுரை /

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டனுக்கு மதுரையில் பாராட்டு விழா

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டனுக்கு மதுரையில் பாராட்டு விழா

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டனுக்கு  பாராட்டு

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டனுக்கு பாராட்டு

Handicap Cricket Team | இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ளார் மதுரையை சேர்ந்த சச்சின் சிவா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரையை சேர்ந்த சிவா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சச்சின் சிவா என அழைக்கப்படும் இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழன்.

தற்போது மதுரை தெப்பக்குளம், மருதுபாண்டியர் நகரில் வசித்து வருகிறார். சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரியிலும் கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த சச்சின் சிவா தமிழக அணியில் இடம்பிடித்தார்.

அதன்பின்னர், தமிழக அணியில் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். பின்னர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி, தற்போது இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய் - மதுரை மக்கள் மகிழ்ச்சி!

இவருக்கான பாராட்டு விழா நேற்று (28/10/2022) மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரையின் ஆட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் நடந்தது.

இந்நிகழ்வில் சச்சின் சிவா பேசுகையில் “என் பெற்றோருக்கு பூர்வீகம் விருதுநகர் மாவட்டம் வீரசோழன். தற்போது மதுரை அனுப்பானடியில் இருக்கிறோம். தியாகராஜர் மாடல் பள்ளியிலும், சௌராஷ்டிரா பள்ளியிலும் படித்து வக்போர்ட் கல்லூரியில் டிகிரி படித்துக்கொண்டிருக்கும்போது கிரிக்கெட் மேல் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மாவட்ட, மாநில அளவில் விளையாடி தற்போது இந்திய அணிக்கு தலைமை தாங்குவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார்.

மேலும் “தனிப்பட்ட முறையில் 115 ரன்கள் அவுட் ஆகாமல் விளையாடி தேசிய அளவில் சாதனை செய்தேன்.

இந்திய அளவிலான அணியில் அப்போது நான் ஒருவன்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். இந்நிலையில் தான் இந்த கேப்டன் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் இந்த பொறுப்பு மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களைப்போன்றவர்கள் பயிற்சி எடுப்பதிலிருந்து போட்டிகளுக்கு சென்று விட்டு வரும் வரை பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.

இதையும் படிங்க : மதுரை மீனாட்சியின் நிஜப்பெயர் முதல் சாதி வரி நீக்கம் வரை... கல்வெட்டு ஆய்வு முடிவுகள் சொல்லும் புதிய உண்மைகள்...

எனவே மக்கள் ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கும் கொடுத்து, போட்டிகளை காண வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு இதிகாசங்கள், கோயில்கள் என பல சிறப்புகள் இருப்பதோடு சேர்த்து மதுரையை சேர்ந்த ஒருவர் இந்திய அணி கேப்டனாக உள்ளது மதுரைக்கு கூடுதல் சிறப்பு” என பாராட்டினார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai