முகப்பு /மதுரை /

மதுரையில் வருகிறது மெட்ரோ.. மதுரை மக்களின் கருத்து என்ன?

மதுரையில் வருகிறது மெட்ரோ.. மதுரை மக்களின் கருத்து என்ன?

X
மதுரை

மதுரை மெட்ரோ

Madurai | மதுரையில் ரூ. 8500 கோடி மதிப்பீடடில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரையில்போக்குவரத்து நெரிசலைகுறைக்க கூடிய வகையில்,திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில், 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில்,மதுரைக்கு 8,500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மதுரை மக்கள் கூறுவது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்?,சென்னை போன்ற மாநகரில் மெட்ரோ திட்டம் செயல்படுவது போன்று மதுரையில் மெட்ரோ திட்டம் வந்தால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

எங்கள் கல்லூரிக்கு போயிட்டு வருவதில் சிரமம் இருக்காது. கரெக்டான நேரத்தில் கல்லூரிக்கு செல்வது ஏதுவாக இருக்கும் என்றும், இது ஒரு நல்ல திட்டம் மதுரையின் தொழில் மற்றும் கல்வி வளர்ச்சி இதன் மூலம் மேம்படும் என்றும் நடுத்தர மக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயன் தரும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், நகரின் முக்கிய பகுதியில் அமைய இருப்பதால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் இல்லாமல் இருக்கும் என்றும் சென்னை, கோவை போன்ற மாநகரங்களில் அடுத்தபடியாக மதுரை இருப்பதால் இந்தத் திட்டம் வருவதின் மூலம் மதுரை மாநகரம் இன்னும் வளர்ச்சி அடையும் என்று கூறுகின்றார்கள்.

top videos
    First published:

    Tags: Local News, Madurai, Metro Train