மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து வழிபடுதல் வழக்கம். இந்த வேண்டுதலை தினமும் மீனாட்சியம்மனிடம் அவரது திருதோளில்இருக்கும் கிளி சொல்லிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
மீனாட்சியை எண்ணி அழுதகிளி:
மதுரை மீனாட்சி அம்மனின் நினைக்கும் போது, அன்னையின் திருத்தோளில் இருக்கும் கிளியும் நம் நினைவுவரும். மீனாட்சி மதுரையை ஆட்சி செய்து வந்த நேரத்தில், அவரை பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வேண்டுதலை செல்லுமாம் கிளி
உலகையே காக்கும் அன்னையான மீனாட்சி, அந்த கிளிக்கு அருள்பாலித்து தன்னுடனே வைத்துக் கொண்டார் என சொல்லப்படுகின்றது. அதுமட்டுமல்ல அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி அன்னை மீனாட்சியிடம் சொல்லிக்கொண்டேஇருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிளி மீதும் பக்தி:
அதனால் தான், பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் மீது அமர்ந்திருக்கும் அந்தக் கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள். எனவே, பக்தர்கள் அன்னை மீனாட்சியை வழிபடும் போது, அந்த கிளியை கண்டு கொள்ளாமல் விட்டு விடுக்கூடாது.
வேண்டுதலை மறக்காமல் கிளியிடம் சொல்லுங்கள்:
மதுரை மீனாட்சி எப்போதும் அருள்பாலிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதால்,உங்கள் வேண்டுதல்களை அந்த கிளியிடமும் சொல்லி வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லிவேண்டுதல்களை நிறைவேற்றிட செய்யும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.