முகப்பு /மதுரை /

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா.. மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா.. மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Madurai News : மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை சித்திரை திருவிழா. இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உப கோவிலான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா மார்ச் 26ம் முருகப்பெருமானின் முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இத்திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையோடு மார்ச் 1ம் தேதி யானை வாகனம் மூலம் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும், மார்ச் 5ம் தேதி பங்குனி உத்திரத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜையும், மார்ச் 7ம் தேதி இரவில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் பூஜையும், மார்ச் 8ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்வு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் மற்றும் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

மேலும் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான மார்ச் 9ம் தேதி நடைபெறும் தேரோட்டம் காலையில் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தெரு முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

First published:

Tags: Local News, Madurai