முகப்பு /மதுரை /

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பாண்டிய கால ஓவியங்கள் வைப்பு!

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் பாண்டிய கால ஓவியங்கள் வைப்பு!

X
மதுரை

மதுரை காந்தி அருங்காட்சியகம்

Madurai gandhi museum | மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் fosh சார்பில் வரையப்பட்ட பாண்டிய கால ஓவியங்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

  • Last Updated :
  • Madurai, India

மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் எப்போ fohs அதாவது ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஹெரிடேஜ் மூலம் பாண்டிய நாட்டு ஓவியங்கள் பயிலரகம் என்ற தலைப்பில் பாண்டிய கால ஓவியங்கள் வரையும் நிகழ்வு நடைபெற்றது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த பாண்டிய கால ஓவியங்கள் பயிலரங்கத்தில் பல்வேறு மாவட்டத்தில் உள்ள மிகச் சிறந்த ஓவியர்கள் கலந்து கொண்டனர்.  Fosh சார்பாக பாண்டிய நாட்டு ஓவியங்களைச் சிறந்த ஓவியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதனைப் பார்த்து ஓவியர்கள் தத்ரூபமாகவும் கலைநுட்பத்துடனும் வரைந்தனர்.  20க்கும் மேற்பட்ட ஓவியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இரண்டு நாட்களாக பாண்டிய கால ஓவியங்களை வரைந்தனர்.

இந்த நிலையில் கலை நுட்பத்துடன் வரைந்த பாண்டிய நாட்டுக்கால ஓவியங்களை மக்களுக்கும் எடுத்துரைக்கக் கூடிய வகையில் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று அரசு அருங்காட்சியகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | தங்கப்பல்லக்கில் பவனி வந்த சொக்கர் - மீனாட்சி.. சொக்கி நின்ற மதுரை மக்கள்!

இதனை ஓவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில், காலை 9:30மணியிலிருந்துமாலை 5 மணி வரை திறக்கப்பட்டு இருக்கும். இந்த அரசுஅருங்காட்சியகத்திற்குஅனுமதி கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Madurai