முகப்பு /மதுரை /

பால் சர்பத் ருசிக்காக நடுராத்திரி 2 மணிக்கு கூட இளைஞர்கள் படையெடுக்கும் கமுதி பால் கடை..

பால் சர்பத் ருசிக்காக நடுராத்திரி 2 மணிக்கு கூட இளைஞர்கள் படையெடுக்கும் கமுதி பால் கடை..

X
மதுரை

மதுரை

Kamuthi Milk Shop | பாலில் பாதாம்பால், ரோஸ்மில்க் எல்லாம் நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் பால் சர்பத் பால்கோவா பால் சாப்பிட்டு இருக்கிறீர்களா?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி பகுதியில் இருக்கும் கீழக்கரை பகுதியில் தான் முதன் முதலாக கமுதி பால் கடை ஆரம்பித்துள்ளனர். 50 வருடமாக பரம்பரை பரம்பரையாக ராமநாதபுரம், பரமக்குடி, ஏர்வாடி, கமுதி என சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 13 கடைகள் இயங்கி வருகிறதாம். தற்போது நம்ம மதுரையில முதன்முதலாக அதுவும் அண்ணா நகரில் விடிய விடிய அதாவது அதிகாலை 2 மணி வரை இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.

இந்த கடையின் ஸ்பெஷல் என்னவென்றால் 100 லிட்டர் பாலில் இருந்து 75 லிட்டர் வரை சுண்ட காய்ச்சிய பசும்பாலில் விதவிதமான பால் சர்பத், பால்கோவா பால் லெஸ்ஸி, ரோஸ் மில்க் போன்ற குளிர்பானங்களும் சூடான பாதாம் பால் கருப்பட்டி பால் என பல்வேறு வகையான குளிர்பானங்கள் பசும் பாலிலேயே செய்து கொடுக்கப்படுகிறது.

சுண்ட காய்ச்சிய பாலை எடுத்து மிக்சர் மூலமாக நன்றாக மிக்ஸ் செய்து கொள்கின்றனர். பின்பு அதில் பாலில் ஏடுகளை போட்டு மேலும் இனிப்பிற்காக சிறிதளவு சர்க்கரையும் சேர்த்துக் கொண்டால் லெஸ்ஸி ரெடியாகி விடுகிறது. மேலும் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு வெண்ணிலா ஐஸ்கிரீமை போட்டு அதில் கமுதி பால் கடையில் தயாரிக்கப்படும் பால்கோவாவை சேர்த்து காய்ச்சி வைத்த பாலையும் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து விட்டால் பால்கோவா பாலும் ரெடி ஆகி விடுகிறது. இவ்வாறு சுண்ட காய்ச்சிய பசும்பாலை கொண்டே பல்வேறு வகையான பாலில் செய்யப்படும் குளிர்பானங்களையும் செய்து கொடுக்கின்றனர்.

First published:

Tags: Local News, Madurai