ஹோம் /மதுரை /

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் கண் கவரும் வண்ண ஓவியங்கள் கண்காட்சி... மறக்காமல் விசிட் பண்ணுங்க

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் கண் கவரும் வண்ண ஓவியங்கள் கண்காட்சி... மறக்காமல் விசிட் பண்ணுங்க

X
ஓவியக்

ஓவியக் கண்காட்சி

Madurai | மதுரை அரசு அருங்காட்சியத்தில் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக அழகு நவீன ஓவியங்கள் என்ற தலைப்பில் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக மாணவர்கள் சார்பில், அழகு நவீன ஓவியங்கள் 2023 என்ற தலைப்பில் மதுரை காந்தி மியூசியம் பகுதியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாணவர்களின் ஓவியங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.இங்கு உள்ள மாணவர்களின் ஓவியங்கள் வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளது.

புகைப்பிடிப்பதினால் ஏற்படும் தீமைகள், புத்தர், குழந்தை திருமணத்தினால் பெண்களின் கனவு கேள்விகுறி?,ரஷ்யா உக்ரைன்போர் பற்றியும், பெண்களின் சுதந்திரம்,5 ஜி போன்ற கதிர்வீச்சால் சிட்டுக்குருவிகளின் இனம் அழிதல் என பல வகையான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

காட்சிப்படுத்தப்பட்ட ஓவியம் 

இந்த ஓவியங்கள் மிகவும் நுணுக்கமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காட்சிப்படுத்தப்பட்ட ஓவியம்

இந்த ஓவியங்களை காண்பதற்குவெளிநாட்டவர்கள் முதற்கொண்டு பல்வேறு பொதுமக்கள் வருகை தருகின்றார்கள். அரசு அருங்காட்சியகத்தின் நுழைவு கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து இயக்கம்.. முன்பதிவு செய்வது எப்படி?

மேலும் செல்போன், கேமரா போன்றவற்றினால் புகைப்படம் எடுப்பதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.நீங்களும் ஓவியப் பிரியராக இருந்தால் இந்த இடத்திற்கு கண்டிப்பா வந்து பாருங்க.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai