Home /madurai /

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவக்கம்

மதுரை

மதுரை

Madurai Meenakshi Amman temple Navratri Festival | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவங்குகிறது.  இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் வரும் 26ம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை ஆகியவை நடக்கிறது.

இதையும் படிங்க ; மதுரைவாசிகளின் ஃபேவரைட் இளநீர் சர்பத்.. இதில் என்ன ஸ்பெஷல்?

கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மீகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு கொலுச்சாவடிக்கு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்க விரும்புவோர், உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனுக்கு வரும் 26-ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 27-ம் தேதி கோலாட்ட அலங்காரமும், 28-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ம் தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ம் தேதி வெள்ளி ஊஞ்சல் அலங்காரமும், அடுத்த மாதம் 1-ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், 2-ம் தேதி தண்ணீர் பந்தல் வைத்தல் அலங்காரமும், 3-ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ம் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடர்பாக புராணங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:

முன்னொரு காலத்தில் மஹிசாசூரன் என்பவன் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளால் அவனுக்கு அழிவு ஏற்பட கூடாது என்று சிவபெருமானிடம் வரம் பெற்றான். அதன் பிறகு அவன் தேவர்களை துன்புறுத்தினான்.

இதுபற்றி தேவர்கள் அன்னை பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து பார்வதி தேவி 9 நாட்கள் விரதம் இருந்து, அந்த அரக்கனை வதம் செய்தார். "மஹிஷம்” என்பதற்கு அறியாமை அல்லது இருள் என்று பொருள். அதாவது இந்த உலகில் அறியாமை இருள்நீங்கி, அறிவு என்னும் ஒளி வீசி ஒளிமயமாக விளங்குவதை குறிப்பிடுவதே நவராத்திரியின் தத்துவம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி கலைவிழா வரும் 26-ம் தேதி முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Madurai

அடுத்த செய்தி