ஹோம் /மதுரை /

மதுரை கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி கருட வீதி உற்சவம்..

மதுரை கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் வரும் 5ம் தேதி கருட வீதி உற்சவம்..

மதுரை

மதுரை

Kontakai Deivanayaka Perumal Temple | மதுரை மீனாட்சியம்மனுக்கு உபகோவிலாக உள்ள திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவில் கருட வீதி உற்சவம் அடுத்த மாதம் 5ம் தேதி நடக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உபகோவிலாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவில் உள்ளது.

இதையும் படிங்க; பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் நிதியுதவி பெறுவது எப்படி? - மதுரை கலெக்டர் அறிவிப்பு

இது திருமலையாழ்வாரின் அவதார திருத்தலம் ஆகும். வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றும் ஆகும். தென்கலை வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியார் மணவாளமாமுனிகள், குரு திருவாய்மொழி பிள்ளையிடம் உபதேச சாரங்களை கற்று தெளிந்தது இந்த கோவிலில் தான்.

இங்கு கோவில் கொண்டுள்ள பெருமாளை வழிபடுவோர் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். இறைவனை பூரம் நட்சத்திரத்தில் வணங்கி வழிபடுவோருக்கு திருமணத்தடைகள் நீங்கும்.

பதவி உயர்வுகள் கிட்டும் என்பது ஐதீகம் ஆகும். கொந்தகை தெய்வநாயக பெருமாள் கோவிலில் அடுத்த மாதம் 5ம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு ஸ்தபன, விசேஷ திருமஞ்சனமும், 11.30 மணிக்கு விசேஷ தீபாராதனை, தீர்த்த கோஷ்டி பிரசாதம் வழங்குதலும் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தெய்வநாயக பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடு நடக்கிறது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Madurai