ஹோம் /மதுரை /

மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் - இதில் உங்கள் பகுதி இருக்கிறதா?

மதுரையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் - இதில் உங்கள் பகுதி இருக்கிறதா?

மின் தடை

மின் தடை

Madurai News | மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (நவம்பர் 9) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கல்புளிச்சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. இந்த தகவலலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown