முகப்பு /மதுரை /

மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. பாலம் கட்டும் பணியால் மக்கள் குழப்பம்!

மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. பாலம் கட்டும் பணியால் மக்கள் குழப்பம்!

X
மதுரை

மதுரை

Madurai Obula Padithurai | மதுரை ஓபுளா படித்துறை பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் காரணத்தினால் தென்கரை சாலை மூடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூபாய் 23 கோடி செலவில் மதுரையில் உள்ள பழுதடைந்த பாலங்கள் இடிக்கப்பட்டு புதிய பாடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்ற வருகின்றது. அந்த வகையில் மதுரையில் வடக்கரையிலிருந்து தென்கரை செல்லக்கூடிய ஓபுளாதரைப்பாலும் முடிக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஓபுளா படித்துறை பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் காரணத்தினால் தென்கரை சாலை மூடப்பட்டுள்ளது. மூடப்பட்டதற்கான முறையான பெயர் பலகைகள் மற்றும் தடுப்புகள் ஏதும் வைக்காத காரணத்தினால் நெல்பேட்டை,  சிம்மக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வைகை ஆற்றை ஒட்டி உள்ள தென்கரைச் சாலை வழியாக குருவிக்காரன் சாலை தெப்பக்குளம் மற்றும் விரகனூர் ரிங் ரோடு போன்ற பகுதிகளுக்குச் செல்லக்கூடிய மக்கள் இப்பகுதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் தடுப்புகள் அல்லது முறையான பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.

First published:

Tags: Local News, Madurai, Traffic, Two Wheeler