ஹோம் /நியூஸ் /மதுரை /

ஜல்லிக்கட்டில் கூடுதல் நேரம் கிடையாது.. மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

ஜல்லிக்கட்டில் கூடுதல் நேரம் கிடையாது.. மதுரை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

ஜல்லிகட்டு

ஜல்லிகட்டு

Madurai jallikattu | பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 15, 16,17 ஆகிய தேதிகளில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிகட்டு நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Alanganallur

மதுரை ஜல்லிக்கட்டில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட மாட்டாது என அலங்காநல்லூரில் ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற 17ஆம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

இன்று அலங்காநல்லூர் வாடிவாசல், ஆரம்ப சுகாதார நிலையம், காளைகள் சென்று சேருமிடம், வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட பகுதிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் சிறந்த முறையில் ஈடுபட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படமாட்டாது,

பார்வையாளர்கள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் முதலுதவி சிகிச்சைகள் செய்ய மருத்துவ குழு தயார் நிலையில் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தரப்படும் .

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நேற்று முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

First published:

Tags: Alanganallur, Jallikattu, Local News, Madurai