ஒட்டுமொத்த மதுரையே களைக்கட்டு கூடிய வகையில் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா ஒரு பக்கம் இருக்க அந்த சித்திரை திருவிழாவையே கலைக்கட்ட கூடிய வகையில் நாட்டுப்புற கலைஞரான மதுரை சக்தி கார்த்திக் பாடிய கள்ளவர் பாட்டு தற்பொழுது கைலாசாநாடு வரை சென்று நித்தியானந்தா மூலம் கள்ளழகர் பாட்டு பாடிய மதுரை சக்தி கார்த்திக்கு விருந்து வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது குறித்து நாட்டுப்புற கலைஞரான மதுரை சக்தி கார்த்தி கூறும் பொழுது, தமிழ் புத்தாண்டு அன்று நான் பாடிய பாட்டான ‘அடர்ந்த மலர் காடு என்று கள்ளழகர் பாட்டை சித்திரைத் திருவிழாவை தாண்டி கைலாசாவில் உள்ள நித்தியானந்தா வரை சென்றுள்ளது. என்னுடைய பாடல்களை யூட்யூபில் பதிவிறக்கம் செய்த போது இதை பார்த்த நித்தியானந்தா என்னை பாராட்டி கைலாச சரஸ்வதி என்ற விருது ஒன்றை ஆன்லைன் மீட்டிங் மூலமாக வழங்கினார்.
இந்த பாடலை பாடி பத்து வருடங்கள் ஆயிற்று ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு கைலாஷா ஆசிரமத்திலிருந்து ஜோதி நித்தியானந்தா என்ற ஒரு பெண் இந்த பாடலை பற்றி பாராட்டினார். தற்பொழுது பத்து நாட்களுக்கு முன்னர்அவரை மறுபடியும் என்னை அழைத்து உங்களுக்கு சுவாமிஜி அவார்டு ஒன்றை அலர்ட் செய்து உள்ளார் என்று கூறினார்.
Zoom மீட்டிங் மூலம் வெளி ஆசிரமத்தில் இருக்கும் வெளிநாட்டு பெண் உறவு பேசினார் இந்த மீட்டிங்கில் வெளிநாடு முதற்கொண்டு பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு துறையில் இருப்பவருக்கும் வாழ்த்துகள் கூறி பாராட்டு சான்றிதழ் வழங்கினார் பிறகு சுவாமிஜி பாராட்டினார் ஆனால் சுவாமிஜி நேரில் பார்க்கவில்லை.
அதேபோல் ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா சுவாமிஜிக்காக ஒரு பாடலை பாடி தருமாறும் கேட்டார்கள் அதற்கான வேலைப்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றது என்றார். நாட்டுப்புற கலைஞரான என்னை பாராட்டு இந்த விருதை கொடுத்துள்ளார். திறமையுள்ள எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள் ஆனால் மதிப்பு இல்லை தற்பொழுது எங்களை மதித்து சுவாமிஜி அளித்த இந்த விருது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Nithyananda