ஹோம் /மதுரை /

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் - புதிய வசதிகள் என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் - புதிய வசதிகள் என்ன?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Madurai Meenakshi Amman Temple | தமிழக அரசு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் பல்வேறு தகவல்களுடன், புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை என்றாலே பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில்’. இந்த மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

மதுரை மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களை கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. 600 வருடங்களுக்கு மேலான கட்டுமானத்தில் உருவாகியதும், மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கோவிலின் உட்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அளவில் அமைந்திருக்கிறது பொற்தாமரை குளம்.

இந்த கோவிலுக்கு உள்ளநாட்டவர் மட்டுமல்லாது. ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்வதைப் பார்க்க முடியும். இவ்வாறு உலக புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மீக தலமான இருந்து வருகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோவிலுக்கு நன்கொடை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Temple