ஹோம் /மதுரை /

மதுரை மாநகராட்சி மக்கள் புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி சேவை

மதுரை மாநகராட்சி மக்கள் புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி சேவை

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி

Madurai Corporation | மதுரை மாநகராட்சி பொதுமக்கள் புகார் தெரிவிக்க ‘உங்கள் குறைகளை தீர்க்க ஒரு அழைப்பு மட்டுமே போதும்’ என்ற உறுதியுடன் புதிய தொலைபேசி சேவையுடன் கூடிய தானியங்கி மென்பொருள் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை, மாநகராட்சியின் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் முகாம் மற்றும் மேயரின் சிறப்பு முகாம் ஆகியவற்றில் மனுக்ககாக கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அடிப்படை வசதிகளுக்கான சேவைகளை பெறுவதற்கும், அதில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்கவும் மாநகராட்சியில் வாட்ஸ்அப் செயலியுடன் கூடிய ஒருங்கிணைந்த புகார் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புகார்களுடன் உடனுக்குடன் தீர்வு காண்பதற்காக ‘உங்கள் குறைகளை தீர்க்க ஒரு அழைப்பு மட்டுமே போதும்’ என்ற உறுதிமொழியுடன், இந்த புதிய தொலைபேசி சேவை மற்றும் வாட்ஸ்அப் எண் 7871661787 அமுலுக்கு வந்துள்ளது.

இந்த தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் புகார் செய்தால், அந்த புகார்கள் தானியங்கி மூலம் மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகாரின் விபரங்கள் தெரிவிக்கப்படும். அவ்வாறு பெறப்பட்ட புகார்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கப்படவில்லை எனில் அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பப்படும். புகார்கள் நிறைவடையவில்லை எனில் ஆணையாளரின் மேற்பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read :விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

மேலும், பொதுமக்கள் புகார்களை அனுப்பி உடனுக்குடன் அதற்கு தீர்வு காண உதவி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி அழைப்பு மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் மற்றும் www.mducorpicts.com என்ற மதுரை மாநகராட்சி இணையதளம் மூலமாக தெரிவிக்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புகார் பதிவு செய்யப்பட்டவுடன் புகார் ஒப்புகை எண் ஒன்று உருவாக்கப்பட்டு, பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த ஒப்புகை எண் மூலமாக புகாரின் நிலையை அன்லைனில் (Online) பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Madurai, Madurai corporation