முகப்பு /மதுரை /

மதுரை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. யார் இவர் தெரியுமா?

மதுரை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. யார் இவர் தெரியுமா?

மதுரை மாநகராட்சி ஆணையாளர்

மதுரை மாநகராட்சி ஆணையாளர்

Madurai new commissioner | மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ள பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் ஆக இருந்த சிம்ரன் ஜீத் சிங் காலோன் சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குனராக இடமாற்றப்பட்டார். இவர் கமிஷனர் ஆக பதவி வகித்த நாளிலிருந்து அதிகாரிகளின் 'வாக்கி டாக்கி'கள் பயன்பாடின்றி கிடந்ததை பயன்படுத்த வேண்டும் என பல்வேறு திட்டங்களை செய்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலராக இருக்கும் இறையன்பு மதுரை சேலம் போன்ற மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்கள் நியமனம் செய்து உத்தரவிட்டார்.

அந்த வகையில் மதுரை மாநகராட்சியின் புதிய கமிஷனர் ஆக ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரவீன் குமார் மதுரை மாநகராட்சியின் புதிய கமிஷனர் ஆக பொறுப்பேற்க உள்ளார்.

இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர். பி.இ., எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்தவர். தனியார் நிறுவனத்தில் 5 ஆண்டு மென் பொறியாளராக பணியாற்றியவர். 2017ல் ஐ.ஏ.எஸ் முடித்தவர், 2018ல் மதுரையில் கூடுதல் கலெக்டராக, 2019 - 21ல் கடலுாரில் துணை கலெக்டராகஇருந்துள்ளார்.

தற்பொழுது மதுரை மாநகராட்சி கமிஷனர் ஆக நியமிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Madurai, Madurai corporation