நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயிலை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரையிலிருந்து மார்ச் 3 அன்று புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக மார்ச் 5 அன்று மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு நடத்தப்படுகிறது.
பின்பு மார்ச் 6ஆம் தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், மார்ச் 7 அன்று சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், மார்ச் 9 அன்று நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, மார்ச் 10 அன்று பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், மார்ச் 11 அன்று அவுரங்காபாத் குருஸ்ணேஸ்வரர் தரிசனம், மார்ச் 12 அன்று அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், மார்ச் 13 அன்று பார்லி வைத்தியநாதர் தரிசனம், மார்ச் 14 அன்று ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் முடித்து சுற்றுலா ரயில் மார்ச் 15 அன்று மதுரை வந்து சேருகிறது.
ரயில் கட்டணம் உணவு தங்கிவிடும் உள்ளூர் பேருந்து கட்டணம் உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 23,400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்துடன் குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு கூடுதலாக கட்டணம் ரூபாய் 7,100 செலுத்த வேண்டும்.
சக்தி பீட சுற்றுலா ரயில் :
இதேபோல், சக்தி பீட சுற்றுலா ரயில் மதுரையில் இருந்து பிப்ரவரி 9 அன்று புறப்பட்டு பிப்ரவரி 12 அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி தரிசனம், கங்கையில் புனித நீராடி விசாலாட்சி அம்மன் தரிசனம், கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து மங்கள கௌரி தேவி தரிசனம், காமாக்யா தேவி தரிசனம், கொல்கத்தா காளி தரிசனம், காளிகாட், போளூர் மடம், தஷிணேஸ்வரர் தரிசனம், ஒடிசா கொனார்க் சூரிய கோயில், பூரி ஜெகநாதர் மற்றும் பிமலா தேவி தரிசனம் முடித்து சுற்றுலா அறையில் பிப்ரவரி 21 அன்று மதுரை வந்து சேரும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பிப்ரவரி மாத சக்தி பீட சுற்றுலா ரயிலுக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூபாய் 21,500 வசூலிக்கப்படும் இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு www.ularail.com என்ற இணையதளத்திலும் அல்லது 7305858585 என்ற அலைபேசி எண் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்” என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Southern railway