மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த கணவன் - மனைவி இருவர் தமக்கு சொந்தமான நிலத்தில் பல வகையான விவசாயம் செய்து அசத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தை அடுத்துள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தான் இந்திராணி . இவர் தனது கணவருடன் சேர்ந்து சுமார் 39 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நாகமலை புதுக்கோட்டையை அடுத்துள்ள கீழக்குயில்குடி கிராமத்தில் இவரும் இவரது கணவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் காய்கறி வகைகளை பயிரிட தொடங்கியுள்ளனர். பின்னாளில் அதன் மூலமாக அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் காய்கறிகளை விற்பனை செய்தும் அதில் நல்ல லாபம் ஈட்டியதால் பல வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் அகத்தி கீரை, தண்டு கீரை, பாலக்கீரை , முருங்கை கீரை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கீரை வகைகளை பயிரிட தொடங்கி அதில் இன்று வரை நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
இவர்கள் தாங்கள் அறுவடை செய்யும் காய்கறிகளை நேரடியாக தாங்கள் விவசாயம் செய்யும் இடத்திலும், மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள உழவர் சந்தைகளிலும் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திராணி கூறுகையில், அவரது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும்போது தனக்கு திருமணம் நடந்ததாகவும், தனது கணவருடன் சேர்ந்து பிழைப்பிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் தான் திருமணம் ஆன சில நாட்களிலேயே தமக்கு சொந்தமான நிலத்தை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இருப்பினும் அப்போது நிலத்தை விற்க வேண்டாம் என முடிவெடுத்து அதற்கு பதிலாக அந்த இடத்தில் விவசாயம் செய்து நமக்கு தேவையான உணவை நாமே விவசாயத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாளடைவில் இன்று இவர் மற்றும் இவரது கணவர் மட்டுமல்லாது வேலைக்கு 4 பெண்களை பணிஅமர்த்தி பல வகையான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai, Organic Farming